வெளிநாட்டில் மரணமடைந்த கனேடிய ராணுவ அதிகாரி: விசாரணைக்கு உத்தரவு
கனேடிய ராணுவ அதிகாரி ஒருவர் ஈராக்கில் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்புத் துறை மற்றும் கனேடிய ஆயுதப் படை வெளியிட்ட அறிக்கையில், வின்னிபெக்கில் உள்ள 38 கனேடிய படைப்பிரிவுக் குழுவின் தலைமையகத்தின் செயல்பாட்டு அதிகாரியான கேப்டன் எரிக் சியுங் சனிக்கிழமையன்று பாக்தாத்தில் காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தகவல் தொடர்பு இயக்குனரகத்தின் நிர்வாக அதிகாரியாக சியுங் பணியாற்றியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை மற்றும் கனேடிய ஆயுதப் படைகள் சியுங்கின் மரணம் குறித்து விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், அது முடியும் வரை மற்ற விவரங்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளன.