கனடா-அமெரிக்கா இடையேயான பயணங்கள் தொடர்ந்து வீழ்ச்சி
கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான பயணங்கள் கணிசமாக குறைந்து வருகின்றன, கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் Statistics Canada வெளியிட்ட புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இது மூன்றாவது மாதமாக தொடர்ந்து குறையும் நிலைமை பதிவாகியுள்ளது.
2025 மார்ச் மாதத்தில் மட்டும், வெளிநாட்டிலிருந்து திரும்பிய கனடியர் பயணங்கள் 4.3 மில்லியனாக இருந்தன, இது 2024 மார்சுடன் ஒப்பிடுகையில் 14.9% குறைவு என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா இடையேயான நில எல்லைப் பயணங்களில், கார்கள் மூலம் திரும்பிய பயணங்கள் 31.4% குறைந்து, 1.7 மில்லியனாக மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.
அமெரிக்கர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட பயணங்களும் 6.6% குறைந்துள்ளன, எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடியர்களின் மீள்பயணங்கள், அதுபோன்ற மாற்றங்களை கணக்கில் எடுத்தாலும், மொத்தமாக 7.1% குறைவடைந்துள்ளன, குறிப்பாக அமெரிக்காவுக்கான கார் பயணங்கள் 11.7% வீழ்ச்சி அடைந்துள்ளன.