பாலியல் வழக்கு விசாரணை நடைமுறை குறித்து ஆராயும் கனடிய உச்ச நீதிமன்றம்
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளில் முறைப்பாடு அளிப்பவரின் பாலியல் வரலாற்றை நீதிமன்றத்தில் பயன்படுத்த தடை விதிக்கும் பாலியல் வரலாறு சாட்சிய சட்டம் (Rape Shield Law) தொடர்பாக கனடாவின் உச்ச நீதிமன்றம் முக்கிய வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.
இந்த வழக்கில், ஏ.எம். A.M. மற்றும் எம்.பி. M.P. என அடையாளம் மறைக்கப்பட்ட இருவர், ஒரு வீட்டில் வேலை செய்த பெண்ணின் பாலியல் சேவைகளை வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அந்தப் பெண் ஏ.கே. A.K. என அடையாளம் மறைக்கப்பட்டுள்ளார். கனடா குற்றச் சட்டத்தின் பிரிவு 276 இக்கட்டுப்பாட்டை வகுக்கிறது.
இது, முறைப்பாடு அளித்த நபரின் கடந்த கால பாலியல் நடத்தைகள் குறித்த சாட்சியங்களை வழக்கில் பயன்படுத்தும் அம்சங்களைத் தீவிரமாக கட்டுப்படுத்துகிறது.
1. முந்தைய நடத்தை காரணமாக அந்த நபர் ஒப்புதல் அளித்திருக்க வாய்ப்பு அதிகம் என்ற தவறான புரிதலைத் தவிர்த்தல், 2. அந்த நபர் நம்பகமற்றவர் என்ற முன் கூட்டிய நிர்ணயத்தை தவிர்த்தல்.
எனினும் இந்த சட்டமானது சாட்சியங்களை பயன்படுத்துவதற்கான இயலுமையை குறைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளில் விசாரணைகளை முன்னெடுப்பத்தில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை ஆராய்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.