கனடாவில் தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்டு வந்த நபர் கைது
கனடாவின் கியூபெக்கில் தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு நீர்விளையாட்டு பூங்காவில், மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் கடந்த காலங்களிலும் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கியூபெக்கின் கேன்ட்லி பகுதியில் உள்ள மான்ட்ஸ் காஸ்கேட்ஸ் நீர்விளையாட்டு பூங்காவில், குழந்தைகள் எதிரில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ஒட்டாவாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் சிறுவர்கள் நடமாடும் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாத ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த நபர் தகாத முறையில் நடந்து கொண்டதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.