மீண்டும் சீனாவை சீண்டும் ட்ரம்ப் ; விடுத்துள்ள எச்சரிக்கை
ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்குவதால் சீனா இரண்டாம் நிலை தடை அல்லது கூடுதல் வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் தரவுகளின்படி, சீனா ரஷ்யாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 47 வீதத்தை கொள்வனவு செய்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஏனைய நாடுகள் உள்ளன.
அதேநேரம் ரஷ்யாவின் எரிவாயுவில் 51 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொள்வனவு செய்கையில் அதற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் கொள்வனவு செய்யும் இந்தியாவுக்கான வரியை 50 வீதம் அதிகரித்துள்ள ட்ரம்ப், சீனா தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.