கனடா தம்பதியின் நடுங்க வைக்கும் மறுபக்கம்; வாயில்லா ஜீவன்களுக்கு நேர்ந்த கொடுமை
கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணொளிகளை அவற்றை ஒரு செய்திப் பரிமாற்ற செயலி மூலம் விற்ற வழக்கில், பல விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலில் 90 க்கும் மேற்பட்ட பூனைகள், பறவைகள் மற்றும் ஆக்சோலாட்டல் போன்ற விலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளன.
விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை
கடந்த ஆண்டு ஒக்டோபர் 2024 இல், கால்நடை மருத்துவருக்கு கிடைத்த தகவல் மூலம் இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
'Goddess May Barefoot Premium Crush' என்ற பெயரில் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவில், விலங்குகளை நசுக்கிக் கொல்லும் காணொளிகள் விற்கப்பட்டதாகவும் பகிரப்பட்டதாகவும் அரச குற்றவியல் சட்டத்தரணி பாய்ட் மெக்கில் வினிபெக் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வெறுங்கால்களால் விலங்குகளை நசுக்கிக் கொன்றதாகவும், அதைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும், அதில் பெரும்பாலும் பாலியல் ரீதியான அம்சங்கள் இருந்ததாகவும் மெக்கில் கூறினார்.
இந்தக் காணொளிகள் 'டார்க் வெப்'பில் வெளியிடப்பட்டதாகவும், விலங்குகளைக் கொல்வதற்கான விலைப் பட்டியலும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் ஒரு சிறிய எலிக்கு 5 டொலர் முதல் மூன்று பூனைக் குட்டிகள் கொண்ட குடும்பத்திற்கு 180 டொலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
குற்றவாளிகள் இருவரும் தலா ஆறு விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகளின் மின்னணு சாதனங்களைப் பரிசோதித்ததில், விலங்குகள் கொல்லப்படும் பல காணொளிகள் மற்றும் அவர்களின் நடத்தையை அதிகரிக்கத் திட்டமிடுவது தொடர்பான உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட லிமாவின் நாட்குறிப்பில், "தனது கால்களால் உயிர்களைக் கொல்வது எவ்வளவு பிடிக்கும், அது தனக்கு அளிக்கும் இன்பம்" குறித்தும் எழுதப்பட்டிருந்தது.
மே 2024 முதல் ஒக்டோபர் 2024 வரை இந்தக் காணொளிகள் மூலம் சுமார் 2,800 டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
சட்டத்துறையினர் மதிப்பாய்வு செய்த ஆதாரங்களில், 60-க்கும் மேற்பட்ட பூனைகள், ஏழு பறவைகள், ஆறு முயல்கள், ஒரு தவளை மற்றும் ஒரு ஆக்சோலாட்டல் உட்பட 97-க்கும் மேற்பட்ட விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
தம்பதிகள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்படும் முந்தைய தண்டனை அறிக்கைகள் முடிவடைந்த பிறகு, அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்படுகின்றது.