விமானத்தில் 12 மணி நேரம் பரிதவித்த பயணிகள் ; நடுவானில் அரங்கேறிய அவலம்
150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களுடன் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமானம நிலையம் வந்த தனி விமானத்தில் (charter plane) இருந்து, அவர்களை இறங்க அனுமதிக்காததால் 12 மணி நேரம் உள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
தென்ஆப்பிரிக்கா மாநிலத்தில் உள்ள ஜோகன்னஸ்பர்க் ஓ.ஆர். டாம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை தனி விமானம் ஒன்று தரையிறங்கியது. இந்த விமானத்தில் 9 மாத கர்ப்பிணி உள்பட 153 பாலஸ்தீனர்கள் இருந்தனர்.

இஸ்ரேல் முத்திரை கொண்ட ஆவணங்கள்
அவர்களிடம் இஸ்ரேல் முத்திரை கொண்ட ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தென்ஆப்பிரிக்காவில் எங்கு தங்குவார்கள் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை. இதனால் அதிகாரிகள் அவர்களை விமானத்தில் இருந்து இறக்க அனுமதிக்கவில்லை. சுமார் 12 மணி நேரம் விமானத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் கூட தங்கவைக்கப்படவில்லை. சுமார் 12 மணி நேரம் கழித்து தென்ஆப்பிரிக்க மந்திரி தலையிட, அவர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு தங்க இடம் கொடுக்க முன்வந்ததால், அவர்கள் தென்ஆப்பிரிக்கா தங்க அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேல்- காசா இடையிலான சண்டையில் காசா மக்களுக்காக தென்ஆப்பிரிக்கா குரல் கொடுத்தது.
அப்படி குரல் கொடுத்த தென்ஆப்பிரிக்கா, இவ்வாறு செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு விமானங்களில் இதுபோன்று பாலஸ்தீனர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் காசாவில் இருந்து வந்தவர்களாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இவர்களுக்கான தனி விமானம் ஏற்பாடு செய்தது யார் என்பது தெரியவில்லை. இந்த விமானம் கென்யாவின் நைரோபியில் தரையிறங்கிய பின்னர், ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளது.