ஒக்ரோபர் மாதம் கனடாவில் புதிதாக இத்தனை வேலை வாய்ப்புக்களா?
கனடாவில் கடந்த ஒக்ரோபர் மாதம் புதிதாக 108000 வேலை வாய்ப்புக்கள் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டு வந்த நிலையில், ஒக்ரோபர் மாதம் சாதக மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடாவின் வேலையற்றோர் வீதம் 5.2 ஆக காணப்படுகின்றது. கடந்த நான்கு மாதங்களாக தொழில் இழப்புக்கள் பதிவாகியிருந்த நிலையில், ஒக்ரோபர் மாதம் கூடுதல் வேலைவாய்ப்புக்கள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கி வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கனடாவில் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுகின்றது என்பது மறுப்பதற்கில்லை.
உற்பத்தி, கட்டுமானம், தங்குமிடம் மற்றும் உணவு விநியோகம் போன்ற துறைகளில் அதிகளவு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சம்பளங்களும் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.