லத்வியாவில் இருக்கும் கனேடிய துருப்புக்களை சந்தித்த பாதுகாப்பு அமைச்சர்!
லத்வியாவிற்கு விஜயம் செய்துள்ள கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அங்கிருக்கும் கனேடிய துருப்புகளை சந்தித்துள்ளார்.
மகளிர் தின விழாவில் இன்று கனடா பாதுகாப்பு அமைச்சர் லத்வியாவில் இருக்கும் பெண் கனேடிய துருப்புகளுடன் கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டரில் தெரிவித்தது, லத்வியாவில் இருக்கும் பெண் கனேடிய துருப்புக்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
At Camp Adazi, I was thrilled to meet with women @CanadianForces leaders who demonstrate the very best of Canada. On #IWD2022, let’s recognize and thank the incredible women who serve in our military and at @NationalDefence – and let’s recommit to lifting each other up, always. pic.twitter.com/rpeEGkWiej
— Anita Anand (@AnitaAnandMP) March 8, 2022
கனேடிய இராணுவத்தில் உள்ள திறமையான பெண் இராணுவத்தினரை அடையாளம் கண்டு அவர்களை அதாரிப்பது கனடா அரசாங்கத்தின் கடமை என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2017 முதல் லத்வியா படைகளுக்கு 540 கனேடிய வீரர்கள் உட்பட 1,500 நேட்டோ இராணுவ வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.