பெரும்பான்மையான கனடியர்களுக்கு வரலாறு தெரியாது
கனடிய மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு வரலாறு தெரியாது என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இன்றைய தினம் கனடாவில் போர் வீரர்களை நினைவு கூறும் நிகழ்வுகள் நடைபெறும் பின்னணியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக யார் உயிர் தியாகம் செய்தார்கள் எவ்வாறு போராடினார்கள் என்பது பற்றிய விவரங்கள் பலருக்கு தெரியாது என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த காலப்போர் தொடர்பில் மக்களுக்கு போதிய அளவு தெளிவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் பாடசாலைகளில் வரலாறை ஒரு பாடமாக கற்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அநேகமான மாணவர்கள் தங்களது வரலாறு தொடர்பில் போதிய அளவு தெளிவற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டுக்காக அர்ப்பணிப்புகளை செய்த பல்வேறு நபர்கள் தொடர்பில் பல கனடியர்களுக்கு போதிய தெளிவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகளின் மூலம் இந்த விடயம் தெளிவாக புலப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.