கனடாவில் வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கனடாவில் வீட்டு விற்பனை இல் பாரியளவு சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ரியல் எஸ்டேட் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ச்சியான சரிவினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜூலை மாதத்தில் 5.3 வீத சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் மொத்தமாக 37975 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 29 வீத வீழ்ச்சி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீட்டு விற்பனையில் காணப்படும் சரிவு நீண்ட காலத்துக்கு நீடிக்குமா இல்லையா என்பதை தற்போதைக்கு எதிர்வுகூற முடியாது என துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும், வட்டி வீத அதிகரிப்பு பணவீக்கம் போன்ற காரண நிகழால் இவ்வாறு வீட்டு விற்பனையில் சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளின் சராசரி விற்பனை விலைகளும் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ஐந்து வீத சரிவினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளை விற்பனையாளர்கள் தங்களது வீடுகளை பட்டியலிட்டு நீண்ட காலம் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.