ஜோ பைடன் மன்னிப்பு கோருவது மட்டும் போதுமானதல்ல ; கனடிய பழங்குடியின சமூகம்
அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் கனடிய பழங்குடியின சமூகத்தினர் தங்களது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வதிவிட பள்ளிக்கூட முறைமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மன்னிப்பு கோரி இருந்தார்.
இந்த மன்னிப்பு கோரல் நடவடிக்கையானது முதல் கட்டம் மட்டுமே என பழங்குடியின தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல தலைமுறைகளாக காயப்பட்டு உள்ள சமூகத்தை ஆற்றுப்படுத்துவதற்கான முதல் படியாக இதனை கருதுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னதாக கனடாவின் அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் பழங்குடியின மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த வதிவிட பள்ளிக்கூடங்களுக்காக மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் இந்த மன்னிப்பு கோரல் வரவேற்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.