ஹமாஸ் தாக்குதலின்போது காணாமல்போன கனேடிய பெண்: காத்திருந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்
ஹமாஸ் தாக்குதலின்போது மாயமான கனேடிய இஸ்ரேலியரான இளம்பெண் ஒருவரை அவரது குடும்பத்தார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், தற்போது அவரைக் குறித்த துயரச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார் Shir Georgy (22) என்னும் கனேடிய இஸ்ரேலிய இளம்பெண்.
அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், Georgy பாதுகாப்பாக இருப்பதாக முதலில் தகவல் கிடைத்துள்ளது.
மொன்றியலில் வளர்ந்தவரான Georgyயின் தாய், பின்னர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
Georgyயின் பெற்றோர் மருத்துவமனை மருத்துவமனையாக மகளைத் தேடிச் சென்றுள்ளனர். Georgyயின் DNAவைக் கொண்டு வருமாறு அதிகாரிகள் கோரியதையடுத்து, அவரது டூத்பிரஷுடன் அவர்கள் மகளைத் தேடிச் சென்றுள்ளனர் அவர்கள்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, கனடாவில் வாழும் Georgyயின் உறவினர்களுக்கு ஒரு துயரச் செய்தி கிடைத்துள்ளது. ஆம், Georgy கொல்லப்பட்டுவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Georgy, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்காவது கனேடியர் என்பது குறிப்பிடத்தக்கது.