அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களில் பணம் களவாடிய கனடியர்
அமெரிக்காவின் பிரபல சூப்பர் மார்க்கெட்ட்களில் பணம் களவாடிய கனடிய பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் 64,000 அமெரிக்க டாலர்களை தளவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் பல மாநிலங்களுக்குச் சென்று அங்கு காணப்படும் வால்மார்ட் எனும் சூப்பர் மார்க்கெட் தொகுதிகளில் இவ்வாறு பணம் களவாடியுள்ளார்.
மிகவும் நூதனமான முறையில் பணம் களவாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
37 வயதான மோஷன் அக்பரி என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அமெரிக்க சூப்பர் மார்கட்களில் நூதனமான முறையில் பணத்தை களவாடி அவற்றை தனது கனடிய வங்கிக்கு வயர் ட்ரான்ஸ்பர் மூலம் அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பல்வேறு இடங்களுக்கு சென்று இவ்வாறு பணம் களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாம் நாணயத்தாள்களை சேகரிக்கும் நபர் எனக் கூறி காசாளர்களிடம் பணத்தை காண்பிக்குமாறு கூறி நூதன முறையில் பணம் களவாடப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
சுமார் 30 வால்மார்ட் கடைத் தொகுதிகளில் இவ்வாறு பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இரண்டரை லட்சம் டாலர் அபராதமும் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட கூடும் என தெரிவிக்கப்படுகிறது.