அமெரிக்காவில் கனடியர் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில், கனடாவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் ஒன்டாரியோவில் பிறந்த ஜியோவன்னி மைக்கேல் ராபின்சன் என அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
லேக் மிச்சிகனின் மேற்கு கரைக்கு அருகிலுள்ள ஷிபோய்கன் ஃபால்ஸ் பகுதியில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
நள்ளிரவு 12 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலினைத் தொடர்ந்து, அப்பகுதி பொலிஸார் துரித கதியில் விசாரணை நடத்தியுளள்னர்.
படுகாயமடைந்த ராபின்சனுக்கு முதலுதவிகள் வழஙக்ப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ராபின்சனை ஒரு கருப்பு நிற சிறிய வாகனத்தில் வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ராபின்சனின் மரணம் தொடர்பில் அவரது கிராமத்து மக்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.