உடல் உறுப்புகளுக்காக குழந்தைகள் கொலை ; கொடூர பெண்குற்றவாளி கைது!
வடக்கு மெக்சிகோவில், குழந்தைகள் மற்றும் உடல் உறுப்புகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ‘லா டியாப்லா’ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா-மெக்சிகோ கூட்டாண்மை நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட அவர், மெக்சிகோவின் ஜாலிஸ்கோ புதிய தலைமுறை கட்டளை குழுவின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர், சிறிய வருமானம் உள்ள, கர்ப்பிணிபெண்களை தொலைதூர பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுத்து கொலை செய்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட மாதிரிகளின் உடல் உறுப்புகளை வெவ்வேறு முறையில் விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சில குழந்தைகள் சுமார் 14,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகத்தின் தகவலின்படி, இந்த மோசடி பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்கும் ஆதாரமாக இருப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.