ஆர்ட்டெமிஸ் 2: கனேடிய விதைகளின் விண்வெளிப் பயணம்
ஓரியான் என்னும் விண்கலம், நான்கு விண்வெளி வீரர்களுடன் நிலவைச் சுற்றிப் பயணிக்கும் ஆர்ட்டெமிஸ் 2 என்னும் பெயர் கொண்ட திட்டத்துடன் பூமியிலிருந்து புறப்பட்டுள்ளதை பலரும் அறிந்திருக்கலாம்.
ஆனால், அந்த விண்கலத்தில் கனேடிய தாவரங்களின் விதைகள் கொண்டு செல்லப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம், அந்த விண்கலத்தில் ஜெரமி ஹான்சன் என்னும் கனேடியருடன், கனேடிய தாவரங்களின் 2,600 விதைகளும் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அப்படியானால், கனேடிய விதைகளை நிலவில் விதைக்கப்போகிறார்களா என்றால், இல்லை, அந்த விதைகள் விதைக்கப்படுவதற்காக அல்ல, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டு செல்லப்படுகின்றன.
அதாவது, கனடாவுக்கே சொந்தமான தாவரங்களில் 25 சதவிகிதம் அழிவின் விளிம்பில் உள்ளன. ஆகவே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அந்த விதைகள் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

அத்துடன், விண்வெளியிலுள்ள கதிரியக்கம், விதைகள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிவதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த விதைகள் விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பியதும், அவை கனடாவின் பல்வேறு பகுதிகளில் விதைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட உள்ளன.