கனடாவின் மிகக் கொடூரமான தொடர் கொலையாளி சிறையில் மரணம்!
"மிராமிச்சியின் அரக்கன்" (Monster of the Miramichi) என்று மக்களால் அச்சத்துடன் அழைக்கப்பட்ட கனடாவின் பிரபல தொடர் கொலையாளி ஆலன் லெகெரே (78), எட்மண்டன் சிறைச்சாலையில் (Edmonton Institution) உயிரிழந்ததாக கனடா சிறைச்சாலை சேவை (Correctional Service Canada) உறுதிப்படுத்தியுள்ளது.
ஆலன் லெகெரே, இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலை கொலைக் குற்றங்களுக்காக 1987-ஆம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்திருந்தார்.
1986 ஜூன்: நியூ பிரன்சுவிக்கில் ஒரு கடையை வழிப்பறி செய்தபோது, அங்கிருந்த வயதான தம்பதியினரைத் தாக்கியதில் ஜான் கிளெண்டனிங் என்பவர் உயிரிழந்தார்.

இதற்காக 1987-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1989 மே: சிறையில் இருந்தபோது மருத்துவ சிகிச்சைக்காக மான்க்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லெகெரே, அங்கிருந்து அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பியோடினான். சுமார் 6 மாதங்கள் தலைமறைவாக இருந்த காலத்தில், அவன் நிகழ்த்திய கொலைகள் கனடா தேசத்தையே உலுக்கின:
ஆனி பிளாம்: மே 1989-இல் இவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டு, அவரது வீட்டிற்குத் தீ வைத்தாக தெரிவிக்கப்படுகின்றது.
டோனா மற்றும் லிண்டா: அக்டோபர் 1989-இல் சகோதரிகளான இவர்களை அவர்களது வீட்டிலேயே வைத்துக் கொன்றுவிட்டு வீட்டிற்குத் தீ வைத்தாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதர் ஜேம்ஸ் ஸ்மித்: நவம்பர் 1989-இல் இந்த மதகுருவை லெகெரே கொடூரமாகக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 1989-இல் ஒரு டாக்ஸி சாரதி மற்றும் விடுமுறையில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரியைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துத் தப்ப முயன்றபோது, அதே இரவில் லெகெரே மீண்டும் கைது செய்யப்பட்டார்.
திங்கட்கிழமை அன்று உயிரிழந்த லெகெரேவஜன“ மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.