வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட கனேடிய இளம் தாயாருக்கு அவசர கடவுச்சீட்டு
ஈராக்கில் நான்கு மாதங்களாக சிக்கித் தவிக்கும் கனேடிய பெண்ணுக்கு அவசர கடவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மிக விரைவில் கனடாவுக்கு திரும்புவார் எனவும், தமது ஐந்து வயது மகளுடன் இணைந்து கொள்வார் எனவும் தெரிய வந்துள்ளது.
வடகிழக்கு சிரியாவில் உள்ள தடுப்பு முகாமில் சுமார் 35 பெண்கள் மற்றும் குழந்தைகள் தற்போது தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்த நிலையில், நீதிமன்ற தலையீட்டால் கடந்த ஜூலை மாதம் விடுவிக்கப்பட்ட அந்த இளம் தாயார் ஈராக் நகரமான எர்பில் பகுதியில் தங்கி வருகிறார்.
அவருக்கு கனடா புறப்பட்டு வருவதற்கான அவணங்களை உடனடியாக விநியோகிக்க கனேடிய நிர்வாகம் அழுத்தமளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் கடந்தகால தொடர்புகளுக்கு தண்டனையாக கனடா நிர்வாகம் வேண்டுமென்றே குறித்த பெண்ணை கட்டாயமாக நாடு கடத்தியதாக அவரது சட்டத்தரணி Paul Champ குற்றம் சாட்டியிருந்தார்.
2014ல் கனடாவில் இருந்து சிரியாவுக்கு சென்றிருந்த குறித்த பெண்மணி, 2017ல் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனான போர் முடிவுக்கு வந்த நிலையில் குர்து படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
மேலும், சிரியாவுக்கு சென்றதன் நோக்கம், அங்கே அவரது பணி என்ன என்பது தொடர்பான எந்த கேள்விகளுக்கும் குறித்த பெண் பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
2016ல் பிறந்த அவரது மகள், கடந்த மார்ச் மாதம் தடுப்பு முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டு கனடாவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.