துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கியிருந்த கனேடிய பெண்ணின் உடல் மீட்பு!
அண்மையில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நகரங்களில் இடம்பெற்ற பாரிய நில அதிர்வில் சிக்கிய கனேடிய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 6ம் திகதி இடம்பெற்ற பாரிய நில அதிர்வில் இதுவரையில் 35000 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாமர் ஸோரா என்ற ஹாலிபிக்ஸ் பகுதியைச் சேர்ந்தே பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது இரட்டைச் சகோதரர் சாட் ஸோரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
துருக்கியின் அன்டகயா நகரின் ஐந்து மாடி கட்டிடமொன்றின் இடிபாடுகளுக்குள் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தமது சகோதரி மிகுந்த நல்ல உள்ளம் கொண்டவர் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.