சாலையோரம் இறந்து கிடந்த இளைஞர்: சிறுமி உட்பட இருவர் மீது குற்றச்சாட்டு
ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ஒன்ராறியோவின் யார்க் பகுதியில் அதிகாலை 7.50 மணிக்கு வாக்கிங் சென்ற ஒருவர் இளைஞர் ஒருவர் சாலையோரமாக இறந்துகிடப்பதாக பொலிசாருக்கு தகவலளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். ஆய்வு முடிவுகள், அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தன.
Facebook
அந்த இளைஞர், மொன்றியலைச் சேர்ந்த ஸாக்ரி ராம்நாத் (Zachry Ramnath, 18) என தெரியவந்தது. பொலிசார் அந்த இளைஞரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், 15 வயது சிறுமி ஒருத்தி மற்றும் Lyjah Griffiths (18) என்னும் இளைஞர் ஆகிய இருவர் பொலிசாரிடம் சிக்கினர்.
கைது செய்யப்பட்ட அந்த சிறுமி Mississaugaவைச் சேர்ந்தவர். Lyjah கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர். இந்நிலையில், நேற்று, அந்த இருவர் மீதும் கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ராம்நாத், பல்வேறு குற்றச்செயல்களுக்காக முன்பு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |