கனடியர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து வெளியான எச்சரிக்கை அறிக்கை
கனடியர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் பெரும்பாலான மக்கள் உரிய அளவில் உடல் இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாள்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய உடல் பயிற்சிகளை மேற்கொள்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
வயது வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் உடல் பயிற்சிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதிக நேரம் அலைபேசிகளில் ஆழ்ந்திருப்பதாகவும், மளிகை கடைகளுக்கு கூட நடந்து சென்று பொருட்களை வாங்குவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த காலங்களில் மக்கள் நடந்து செல்வது அதிக அளவில் காணப்பட்டதாகவும் தற்பொழுது நடப்பது வெகுவாக குறைந்துவிட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கனடியர்கள் பல்வேறு உடல் ஆரோக்கிய சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
வேலைப்பளு காரணமாக கனடியர்கள் உடல் பயிற்சிக்கு அல்லது உடல் இயக்க செயற்பாடுகளுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உடல் இயக்க செயற்பாடுகளின் வீழ்ச்சி சுகாதார செலவுகளை அதிகரிப்பதாகவும் இது நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் சிக்கலாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.