அவுஸ்திரேலியாவில் பதின்ம வயது பிள்ளைகளின் சமூகஊடக பாவனை முடக்கம்!
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்குகள் செயலிழக்கம் செய்யப்படும் என்று இன்று (20) அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகத் தடையால் பாதிக்கப்பட்ட பயனர்கள், தங்கள் கணக்கு முடக்கம் நிலுவையில் உள்ளதற்கான அறிவிப்பை, செயலியில் உள்ள செய்திகள், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் 14 நாட்களுக்குள் பெறுவார்கள்.

மேசேஞ்சர் தடையிலிருந்து விலக்கம்
இந்தத் தடை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களையும், த்ரெட்ஸ் தளத்தைப் பயன்படுத்த இன்ஸ்டாகிராம் கணக்கு தேவைப்படுவதால், அந்தத் தடையில் உள்ள பயனர்களையும் பாதிக்கும்.
மேசேஞ்சர் தடையிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில், தடையின் விளைவாக, பேஸ்புக் கணக்கு இல்லாமல் பயனர்கள் அதனை அணுகுவதற்கான வழியை மெட்டா உருவாக்க வேண்டியுள்ளது.

டிசம்பர் 4 முதல் மெட்டா ஏற்கனவே உள்ள கணக்குகளுக்கான அணுகலை நிறுத்தவும், 16 வயதுக்குட்பட்டவர்கள் புதிய கணக்குகளைப் பதிவு செய்வதைத் தடுக்கவும் தொடங்கும்.
டிசம்பர் 10 ஆம் திகதிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து கணக்குகளுக்கான அணுகலும் அகற்றப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணக்குகள் செயலிழக்கப்படும் பதின்ம வயதினர் தங்கள் பதிவுகள், செய்திகள் மற்றும் குறுகிய வீடியோக்கள் அல்லது ரீல்களை பதிவிறக்கம் செய்து சேமிக்கலாம்.
அதேவேளை அவர்கள் 16 வயதை எட்டியதும் தங்கள் கணக்கிற்குத் திரும்பலாம் அல்லது தங்கள் கணக்கை முழுவதுமாக நீக்கத் தேர்வுசெய்யலாம்