கனடாவில் இடம்பெற்ற கோரச் சம்பவம்
கனடாவின் பிராம்ப்டனில் அதிகாலையில் ஏற்பட்ட பெரும் வீட்டுத் தீயில் இரண்டு பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குழந்தை ஒருவர் உட்பட நால்வர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பானாஸ் வே பகுதியில், மெக்லாகிலின் வீதி மற்றும் ரிமெம்பரன்ஸ் வீதி அருகில் உள்ள வீட்டில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பீல் போலீசார் தெரிவித்ததன்படி, இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குழந்தை ஒருவர் உட்பட மற்ற நால்வரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அனைவரும் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்று பிராம்ப்டன் தீயணைப்பு துறைத் தலைவர் ஆண்டி கிளின் தெரிவித்துள்ளார்.
ஒரு உயிரிழந்தவர் வீட்டின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மற்றொருவர் வீட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தீயில் அண்டை வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. இருந்தாலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீ ஏற்பட்ட வீட்டில் வசித்த பலர் இன்னும் காணாமல் உள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.