கனேடிய மக்கள் எதைப் பற்றி கரிசனை கொண்டுள்ளனர் தெரியுமா?
சீனாவில் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கம் தொடர்பில் கனேடிய மக்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நனோஸ் ரிசர்ச் என்னும் ஆய்வு நிறுவனத்தினால் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சமூகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து ஏதாவது வகையில் நாட்டு மக்கள் கரிசனை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
55 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் இளைஞர்கள் வரையில் அனைத்து வயது மட்டத்தினரும் சீனாவின் தலையீடுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது வெளிநாட்டு தலையீடு காணப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள பின்னணியில் இந்த கருத்துக் கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொலைபேசி மற்றும் இணைய வழியில் எழுமாறாக கனேடியர்கள் சிலரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.