கனடாவில் பண மோசடிகளில் சிக்கும் மூன்றில் ஒரு கனடியர்!
கனடியர்கள் அதிகளவில் பயண மோசடிகளில் சிக்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த மோசடிகள் தொடர்பில் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் போது சுமார் மூன்றில் ஒரு கனடியர் பயண மோசடிகளில் சிக்குவதாக தெரியவந்துள்ளது.
ப்ளைட் சென்டர் கனடா என்ற நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயண முகவர்கள் போன்று தோன்றி இணை வழியின் ஊடாக கனடியர்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.