உள்ளுர் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு ஒன்டாறியோ முதல்வர் கோரிக்கை
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கனடியர்களை உள்ளூர் பொருட்களை கொள்வனவு செய்வதனை ஊக்குவிக்கும் வகையில் ஒன்டாறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு காணொளி வெளியிட்டுள்ளார்.
பாரம்பரிய கனடிய இனிப்புகளை சுவைக்கும் காணொளியை அவர் X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
புதன்கிழமை (டிசம்பர் 24) வெளியிடப்பட்ட அந்த காணொளியில், ஃபோர்டு பல்வேறு இனிப்புகளை சுவைத்து, அவற்றை அடையாளம் காண முயற்சிக்கிறார்.

வீடியோவின் இறுதியில், “பண்டிகைக் காலத்தில் அனைவரும் கனடிய இனிப்புகளை ருசித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்” என்று ஃபோர்டு கூறினார். “உள்ளூர் கடைகளை இந்த பண்டிகைக் காலத்தில் ஆதரிக்க மறக்காதீர்கள்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“கனடிய பொருட்களை வாங்குவதைவிட சுவையானது வேறொன்றும் இல்லை! இந்த கிறிஸ்துமஸில் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் கொண்டாடும்போது சிறந்த கனடிய இனிப்புகளை முயற்சிக்கவும் என தெரிவித்தார்.
இந்த காணொளி, அமெரிக்காவுடனான வர்த்தக போரின் போது ஃபோர்டின் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.