அமெரிக்காவுக்கு செல்லும் கனடிய பயணிகள் எண்ணிக்கையில் சரிவு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்படுத்திய வரி மோதல் மற்றும் கனடாவை “51வது மாநிலமாக” மிரட்டும் வகையில் வெளியிட்ட கருத்துகள் காரணமாக, அமெரிக்காவுக்கு செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.
2025 மார்ச் மாதத்தில், அமெரிக்காவிலிருந்து காரில் வீடு திரும்பிய கனடியர்கள் முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 32% குறைந்துள்ளனர்.
பெருந்தொற்று காலத்திற்குப் பின் முதல் மிகப்பெரிய சரிவாக பதிவாகியுள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதையே போல், விமானத்தில் திரும்பியவர்களின் எண்ணிக்கையும் 13.5 வீதமாக குறைந்துள்ளது.
டிரம்ப் மேற்கொண்ட தாக்குதலான வரி தீர்மானங்கள், மற்றும் "கனடா ஒரு அமெரிக்க மாநிலமாக மாறும்" என கூறியமை, கனடியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“இந்தச் சறுக்கல் கனடியர்களின் தற்போதைய உணர்வுகளை பிரதிபலிக்கிறது பயண நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கனடியர்கள் சிலர் எதிர்நோக்கிய கசப்பான அனுபவங்களும் இந்த அதிருப்தி நிலைமைக்கு ஏதுவாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கும் கனடியர்களுக்கு புதிய பதிவு விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கனடிய டாலரின் பெறுமதி தற்போது அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 70 சதவிகிதம் மட்டுமே, எனவே சிலர் பொருட்கள் வாங்க அமெரிக்காவுக்குச் செல்லும் எண்ணத்தை தவிர்க்கிறார்கள்.