கனடாவில் 25 வீதமானவர்களுக்கு இப்படியொரு பொருளாதார நெருக்கடியா ?
கனடாவில் சுமார் 25 வீதமானவர்கள் திடீரென ஏற்படக்கூடிய செலவுகளை ஈடு செய்யும் இயலுமை கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் நான்கு பேரில் ஒருவர் அதாவது 25 வீதமானவர்களினால் அவசர தேவைக்காக 500 டொலர் திரட்டிக் கொள்ளும் இயலுமை கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு வாடகை மற்றும் வீட்டுக் கடன் என்பனவற்றை செலுத்துவதில் 44 வீதமான கனேடியர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு வாடகைத் தொடர்பில் இளம் கனேடியர்களே அதிகளவு கரிசனை கொண்டுள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திடீரென ஏற்படக்கூடிய 500 டொல செலவினை தம்மால் ஈடு செய்வதில் சிரமங்கள் நிலவி வருவதாக கூடுதலான பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கனேடிய கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கொள்வனவு தொடர்பில் அதிக கவலை கொண்டுள்ளதாக இந்த தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.