வின்னிப்பிக்கில் வயோதிப தம்பதியினரின் மோசமான செயல் ?
கனடாவின் விண்ணப்பிக் பகுதியில் வயோதிய தம்பதியினர் போதை பொருளை வழங்கியுளளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போதை பொருள் அடங்கிய இனிப்பு பண்டங்களை இவர்கள் சிறுவர்களுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பெயரில் இந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் 63 வயதான ஆண் ஒருவரும் 53 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு விண்ணப்பிக் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 வயது முதல் 16 வயது வரையிலான வயதுகளை உடைய சிறுவர் சிறுமியருக்கு இந்த இனிப்பு பண்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பிரபலமான இனிப்பு பண்டங்கள் பொதியிடப்படும் முறையில் இந்த போதை மருந்து உள்ளடங்கிய இனிப்பு பண்டங்கள் பொதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த இனிப்பு பண்டங்கள் வழங்கப்படவில்லை எனவும் என்ன காரணத்துக்காக இவ்வாறு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டன என்பது இன்னமும் தெரியவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வயோதிப தம்பதியினருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட உள்ளது.