ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்ற நபர் அல்ல ; ட்ரம்ப்
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் ஒப்பிடும்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்ற நபர் ஜெலன்ஸ்கி அல்ல என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி உண்மையான ஆர்வம் காட்டவில்லை
அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ட்ரம்ப் அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது,
''உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி உண்மையான ஆர்வம் காட்டவில்லை.
அமைதி ஒப்பந்தம் வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறினாலும், அதற்கான உடன்பாட்டை எட்ட விரும்பவில்லை. ஒப்பந்தத்தை விரும்புவதாக ஜெலன்ஸ்கி கூறுகிறார். ஆனால் உண்மையில் விரும்பவில்லை.
ஜெலன்ஸ்கி மீது எனக்கு பெரிய அபிமானம் இல்லை. அவர்கள் அந்த நாட்டையே அழித்துவிட்டனர்” என்றார்.