தலைநகரை மாற்றும் முக்கிய நாடு
உலகின் முக்கிய நடன இந்தோனேஷியா தற்போது தலைநகரை காளிமண்டன் பகுதிக்கு மாற்றுவதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புதிய தலைநகரை உருவாக்க சுமார் 32 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் மெகா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. காற்று மாசு, வெள்ளம், நெரிசல் போன்ற பிரச்னைகளால் தலைநகரை மாற்ற அதிபர் ஜோகோ விடோடோ முடிவு செய்ததாகவும், புதிய தலைநகருக்கு "நுசன்டரா" என்ற பெயரை சூட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த பகுதியில் காடுகள் நிறைந்துள்ளதாகவும் அப்பகுதியில் மருந்து, ஆரோக்கியம், தொழில்நுட்பம் சார்ந்த, குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகளை அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.