8 மாத கர்ப்பிணிப் பெண் மீது மோதிய கார் ; இந்திய வம்சாவளி பெண் பரிதாப பலி
அவுஸ்திரேலியா - சிட்னி, ஹார்ன்ஸ்பி புறநகர்ப் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் BMW ரக காரொன்றினால் மோதப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமன்விதா தாரேஷ்வர் என்ற 33 வயதுடைய குறித்த பெண் தனது இரண்டாவது குழந்தையைச் சில வாரங்களில் பிரசவிக்கவிருந்த நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹார்ன்ஸ்பி நகரிலுள்ள வாகன தரப்பிடமொன்றுக்கு வெளியே குறித்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் பாதையைக் கடக்க முயன்றபோது, அவர்களுக்கு வழிவிடுவதற்காக, அந்த வழியாக வந்த கியா ரக காரொன்று வேகத்தை குறைத்துள்ளது.
அதன்போது, 19 வயதுடைய இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த BMW ரக கார் குறித்த காரின் பின் பகுதியை மோதியதியுள்ளது.
இதனைடுத்து, கியா ரக கார் முன்னோக்கிச் சென்று வீதியை கடக்க முற்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.