இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டியின் மேல் மகாராணியார் எழுதிய அட்டை

Sulokshi
Report this article
மறைந்த பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு, மகாராணியார் இறுதி விடை கொடுக்கும் விதமாக தன் கையால் எழுதிய அட்டை ஒன்றை அவரின் சவப்பெட்டியின் மேல் வைத்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து, செயிண்ட் ஜார்ஜ் செப்பலில் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் 73 வருட திருமண வாழ்க்கையில் தற்போதுதான் அவர் கணவரை பிரிந்து இருக்கிறார்.
இந்நிலையில் , மகாராணியார் தன் கையால் எழுதபட்ட அட்டை ஒன்றை, சவப்பெட்டியின் மேல் வைத்துள்ளார்.
அந்த அட்டைகளுக்கு இடையில் வெள்ளைநிற ரோஜா பூக்கள், மல்லி பூக்கள் மற்றும் அழகான மாலையும் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் தற்போது வரை, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு தொடர்பான புகைப்படங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், அதிகாரப்பூர்வ அரச முத்திரை அந்த அட்டையில் உள்ளது.ராணியார் அதில் என்ன எழுதி எருக்கின்றார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.