அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு இந்தியாவில் இருப்பிட சான்றிதழ்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு பீகாரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தியாவில் அவ்வபோது பல சான்றிதழ்களில் பல பிரபலங்களின் போட்டோவை வைத்து விண்ணப்பிப்பது ட்ரெண்டாகி வருகிறது.
பீகாரில் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம்
அந்த ட்ரெண்டிங்கில் தற்போது இணைந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். பீகாரில் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் ஒன்று வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதில் டொனால்டு ட்ரம்பின் போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதனுடன் இணைக்கப்பட்ட ஆதார சான்றுகளை பரிசோதித்தபோது, அதில் டொனால்டு ட்ரம்ப்க்கு போலியான ஆதார் கார்டையும் தயாரித்து இணைத்துள்ளனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு இந்த விண்ணப்பத்தை அனுப்பியவர் யார் என தேடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளை சில நாட்களுக்கு முன்னதாக பாட்னாவில் நாய் ஒன்றின் புகைப்படத்துடன் ‘டாக் பாபு’ என்ற பெயரில் இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.