கனடாவிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தம்
கனடா பிரதமர் மார்க் கார்னி வியாழக்கிழமை அபூதாபியில் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
சூடானில் நடைபெறும் இனஅழிப்பு வன்முறைக்கு ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவளிப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் காரணமாக ஊடக அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த அரசுமுறை பயணம் நடைபெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் சாயித் அல் நஹ்யானை சந்தித்த பிறகு, இந்த முதலீட்டு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

இரு நாடுகளும் விரைவில் முழுமையான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்துக்கான (CEPA) பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கார்னி வியாழக்கிழமை காலை ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான சுல்தான் அல் ஜாபரை சந்தித்தார்.
பின்னர் அபூதாபியின் பிரமாண்ட பள்ளிவாசலையும் அவர் சுற்றிப்பார்த்தார்.