கனடாவில் பிரபலமான பெண் பரிதாபமாக உயிரிழப்பு! நடந்தது என்ன?
கனடாவில் பிரபலமாக இருந்த பெண் பத்திரிக்கை ஆசிரியர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கனடாவின் லண்டன் நகரை சேர்ந்தவர் Sarah Jones (39). இவர் Business London பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் காரில் Sarah சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லொறி ஒன்று மோதியது.
இதில் படுகாயமடைந்த Sarah மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Sarah-வின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல பத்திரிக்கையாளர் Joe Ruscitti கூறுகையில், Sarah இந்த சமூகத்தின் வலுவான ஆதரவாளராகவும், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் போன்ற விடயங்களைப் பற்றி வலுவான எண்ணம் கொண்டவராகவும் இருந்தார்.
சுற்றியிருப்பவர்களுடன் வேடிக்கையாக பேசும் சுபாவம் கொண்டவர் அவர் என கூறியுள்ளார்.