அமெரிக்க மத்திய வங்கி கவர்னருக்கு அதிரடி பதவி நீக்கம்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் லிசா குக்கை பதவியில் இருந்து அதிரடியாக பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி டொனால் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
லிசா மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர போவதாக லிசா குக் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக லிசாவின் வக்கீல் அபே லோவெல் கூறும்போது, மத்திய வங்கி ஆளுநர் லிசா குக்கை நீக்க அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் இல்லை.
ஒரு பரிந்துரை கடிதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரை நீக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சியில் எந்த சட்ட அடிப்படையும் இல்லை.
இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம் என்றார்.