கனடாவில் 200 கிலோ கிராம் எடையுடைய கொக்கெயின் மீட்பு
கனடாவின் வான்கூவர் துறைமுகத்தில் நுழைந்த ஒரு கப்பலில் 200 கிலோகிராமுக்கு மேற்பட்ட கொக்கெயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத சரக்குகள் பனாமாவில் இருந்து வந்த கப்பலில் கண்டறியப்பட்டதாக கனடிய எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 204.5 கிலோகிராம் எடையுள்ள 78 கொக்கெயின் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மோப்ப நாய்களின் உதவியுடன், இந்த கட்டிகள் சிவப்பு திரவம் நிரப்பப்பட்டிருந்த—பேன்ட் நிறப்பொருள் என நம்பப்படும்—கண்டெய்னர்களுக்குள் மறைக்கப்பட்டிருந்தன.
இந்த பறிமுதல், அமைப்புசார்ந்த குற்றங்களை தடுப்பதில் எங்கள் எல்லை அதிகாரிகள் வகிக்கும் முக்கிய பங்கைக் காட்டுகிறது என கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் பசிபிக் பிராந்திய இயக்குநர் நீனா படேல் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருடனான உடனான எங்கள் வலுவான ஒத்துழைப்பின் காரணமாக, சட்டவிரோத போதைப்பொருட்கள் எங்கள் சமூகங்களுக்கு செல்லாமல் தடுக்க முடிகிறது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெயின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேவேளை, பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரீ தனது அறிக்கையில், “இது, குற்றவாளிகள் எவ்வளவு முயற்சிப்பார்கள் என்பதற்கான ஒரு தெளிவான உதாரணம்” என்று குறிப்பிட்டார்.