போர் நிறுத்த அறிவிப்பு ; பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடி மகிழ்ந்த மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் உயர்மட்ட பாதுகாப்புச் சபை அறிவித்த போர் நிறுத்தச் செய்தியைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் பல வாரங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்து, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் 8 மணிநேரக் கெடு முடிவடைவதற்கு முன்னதாகவே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், தெஹ்ரானின் முக்கிய சதுக்கங்களில் திரண்ட மக்கள் இனிப்புகளை வழங்கியும், கோஷங்களை எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது,

போர் நிறுத்தம்
நகரின் முக்கிய வீதிகளில் வாகனங்களில் சென்ற பொதுமக்கள், ஒலியெழுப்பியும் மகிழ்ச்சிக் குரல்களை எழுப்பியும் போர் நிறுத்தத்தை வரவேற்றனர்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதிக்கும் பட்சத்தில் இரண்டு வார காலத்திற்கு ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்தப் போர் நிறுத்தத்தை ஈரானின் புதிய உச்சநிலைத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி அங்கீகரித்ததைத் தொடர்ந்து, இந்த இராஜதந்திர வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.