தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு மேலும் ரூ. 240 குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 480 விலை குறைந்துள்ளது. அத்தோடு நேற்று திங்கட்கிழமை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4625.00க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 60 குறைந்து ரூ. 4,565க்கு விற்பனையாகிறது.
அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ரூ. 240 குறைந்து ரூ. 36,760-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை மேலும், ரூ. 240 குறைந்து ரூ.36,520க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 76.80 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 1.50 குறைந்து ரூ. 75.30 விற்பனை செய்யப்படுகிறது.
அத்தோடு 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு மேலும் ரூ. 240 குறைந்துள்ளது.
தொடர்ந்து விலை ஏற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை தற்போது 37ஆயிரம் குறைவாக விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடையே தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.