ஆஸ்திரேலியாவில் நாளைமுதல் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றம்!
ஆஸ்திரேலியா செல்பவர்கள் PCR சோதனைக்குப் பதிலாக Antigen சோதனையை, பயணத்திற்கு 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொண்டால் போதுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறை நாளை ஜனவரி 23 முதல் நடைமுறைக்குவருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கான சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட நாள் முதல் PCR சோதனை அங்கு கட்டாயமான நடைமுறையாக பேணப்பட்டுவந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட பயணியொருவர் தனக்கு கோவிட் இல்லை என்பதை நிரூபிப்பதற்கான சிறந்த முறையாக PCR சோதனை காணப்படுகின்றபோதிலும், ஆஸ்திரேலியா தற்போது Antigen சோதனையையும் முதன்மை சோதனையாக ஏற்றுக்கொள்வதால், இதனை சர்வதேச பயணத்திலும் நடைமுறைப்படுத்துவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பயணியொருவர் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு 24 மணித்தியாலங்களுக்குள் Antigen சோதனையை மேற்கொண்டு தனக்கு கோவிட் இல்லையென்பதை நிரூபித்தால் போதுமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள், அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள், குறிப்பிட்டவகை ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள் தற்போது நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.