பிரிட்டனின் புதிய மன்னராக மூன்றாம் சார்ல்ஸ் அதிகாரபூர்வப் பதவியேற்பு
மன்னர் சார்ல்ஸ் (King Charles III) பிரிட்டனின் புதிய அரசராக அதிகாரபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாகத் அரசர் பதவியேற்புச் சடங்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
லண்டனில் இருக்கும் செயிண்ட் ஜேம்ஸ் (St. James's) அரண்மனையில் பதவியேற்புச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எலிசபெத் Queen Elizabeth II ) அரசி காலமானதும் சார்ல்ஸ்(King Charles III) மன்னராகிவிட்டார்.
அதை அதிகாரபூர்வமாக்கும் சடங்கே தற்போது நடைபெறுகிறது. மன்னர் சார்ல்ஸ் (King Charles III) அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் அரசவை மன்றத்தின் தலைவராகிறார்.
அந்த மன்றத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் அங்கம் வகிப்பர்.
73 வயது சார்ல்ஸ் (King Charles III) பிரிட்டிஷ் வரலாற்றில் மன்னர் பொறுப்புக்கு வரும் ஆக முதியவர் ஆவார். அவரது தாயார் எலிசபெத் (Queen Elizabeth II ) 27ஆவது வயதில் அரசியாக முடிசூட்டிக்கொணடமை குறிப்பிடத்தக்கது.