தனது நிழலை பார்த்து அழும் குழந்தை; இணையத்தில் வைரலாகும் வீடியோ
குழந்தை ஒன்று தனது நிழலை பார்த்து அழுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் ஒரு பெண் குழந்தை பூங்கா போல காட்சி அளிக்கும் ஒரு இடத்தில் நடந்து செல்வதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த குழந்தை தன்னுடைய நிழலை பார்த்தபடி இருந்துள்ளது.
அதை பார்த்த குழந்தைக்கு அது என்ன என்பது புரியவில்லை. இதனால் அக் குழந்தை அச்சப்பட்டு கையை உயர்த்திய நிலையில் இருந்து பார்த்துள்ளது.
அப்போது நிழலில் இருந்தும் அதே அசைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தை மேலும் அச்சப்பட்டு அழுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
குழந்தை தனது நிழலை பார்த்து அச்சப்படுவது பார்க்க பாவமாக இருந்தாலும் வீடியோவை பார்க்கும் போது சிரிப்பாக இருப்பதாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.