கனடாவில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு
கனடாவின் கேப் பிரிட்டன் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரு குழந்தை சனிக்கிழமை நீரில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கேப் பிரிட்டன் பிராந்திய பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
நியூ வாட்டர்ஃபோர்டு (New Waterford), நோவா ஸ்கோஷியா பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு குழந்தை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டது.
குழந்தை ஆட்டிசம் குறைபாடுடன் இருந்ததாகவும், சமையலறை ஜன்னல் வழியாக வெளியில் தப்பிச் சென்றதை தாய் முதலில் கவனித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், பிற்பகல் 2 மணிக்கு அருகிலுள்ள பாறைக்குன்றுக்கு அருகே நீரில் குழந்தையை கண்டுபிடித்தனர்.
மருத்துவ அவசர ஊழியர்கள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தாலும், குழந்தையின் உயிரைக் காக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.