ஏழ்மையில் தவிக்கும் கனேடிய சிறார்கள்: வெளியான புதிய ஆய்வறிக்கை

report children parent poverty
By Arbin Nov 25, 2021 07:40 AM GMT
Arbin

Arbin

Report

கனடாவில் 2019ல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு சிறார் ஏழ்மை நிலையில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில், கனடாவில் ஏழ்மையில் பரிதவிக்கும் சிறார்களின் மொத்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கனடாவில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் சிறார்களின் மொத்த எண்ணிக்கையானது 1.3 மில்லியன் என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, ஒட்டுமொத்த கனடாவில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகமாக வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சிறார்களின் இந்த முக்கியமான வயதில் காணப்படும் அதிக வறுமை விகிதம், கல்வி மற்றும் தொழில்சார் சாதனைகளில் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

வெளியான ஆய்வறிக்கையின்படி, 2018 மற்றும் 2019 க்கு இடையில் குழந்தைகளின் வறுமை விகிதம் அரை சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 24,000 குழந்தைகள் மட்டுமே வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாக குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதே விகிதத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், கனடாவில் சிறார்களில் ஏழ்மைநிலையை போக்க 54 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடா முழுவதும் சிறார் வறுமை பிரதான பிரச்சினையாக இருக்கும் அதே வேளையில், நுனாவட்டில் இந்த விகிதம் அதிகபட்சமாக 34.4 சதவீதமாக உள்ளது.

கனேடிய மாகாணங்களிலேயே அதிகமாக குழந்தைகள் வறுமையில் இருக்கும் பகுதி மனிடோபா எனவும் இங்கு அதன் எண்ணிக்கை 28.4 சதவீதம் எனவும் பதிவாகியுள்ளது.

மேலும், கியூபெக், ஆல்பர்ட்டா, ஒன்ராறியோ மற்றும் யூகோன் ஆகிய பகுதிகள் மட்டுமே குழந்தைகளின் வறுமை விகிதங்களை தேசிய சராசரியை விட குறைவாக பதிவு செய்துள்ளன.

மட்டுமின்றி, வெளியான அறிக்கையின்படி, 25.5 சதவீத இன ரீதியான பிள்ளைகளும், 35 சதவீத புலம்பெயர்ந்த குழந்தைகளும் வறுமையில் வாடுகின்றனர். ஊனமுற்றவர்களில் 41 சதவீத மக்கள் ஏழ்மையில் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US