சஸ்காட்செவானில் 44 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு: வென்ற அதிர்ஷ்டசாலி!
கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான 'கோல்ட் போல்' ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார்.
ஆனால், தான் அந்தப் பரிசை வென்ற தகவல் இன்னும் அவருக்குத் தெரியவில்லை. சனிக்கிழமை நடைபெற்ற 'லொட்டோ 6/49' குலுக்கலிலேயே இந்த 44 மில்லியன் டொலா் ஜாக்பாட் விழுந்துள்ளது.
வெற்றிபெற்ற இந்த லொத்தர் சீட்டு சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள சாஸ்கடூன் மற்றும் ரெஜினா ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் வெளியேயுள்ள ஒரு பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெற்றிபெற்ற எண் 23202513-03 ஆகும். இந்த எண் முழுமையாகத் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிபெற்ற நபர் அல்லது நபர்கள் தங்களது பரிசுத் தொகையைக் கோருவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.