காசா போரில் குடும்பத்தை இழந்து சிறுவர்கள் தவிப்பு!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 10 நாட்களாகியும் முடிவுக்கு வராத நிலையில், காசாவின் மருத்துவமனைகளிற்கு வருபவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என தெரிவித்துள்ள வைத்தியர்கள் பல குடும்பங்களில் அவர்கள் மாத்திரமே உயிர்தப்பியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் தொழில்புரியும் வைத்தியர் கசான் அபு சிட்டா என்ற வைத்தியர் கடந்தவாரம் காசாவிற்கு சென்று அங்கு பணியாற்றுக்கின்றார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஐந்து மற்றும் நான்கு வயதான இரண்டு சிறுமிகள் எரிகாயங்களுடன்தலையில் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் வீடுகளில் இருந்து உயிர்பிழைத்தவர்களாக மீட்கப்பட்டவர்கள் அவர்கள் மாத்திரமே என குறிப்பிட்டுள்ள அவர் ஒவ்வொரு நாளும் இவ்வாறான பலர் வருகின்றனர் அகதிகளாவது பாலஸ்தீன அடையாளத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ள அவர் மக்கள் மீண்டும் அதனை அனுபவிக்க விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் பாதுகாப்பான இடங்கள் என கருதப்பட்டவையும் மோசமான குண்டுவீச்சிற்கு இலக்காகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.