கனடாவில் இந்த விளையாட்டுப் பொருட்கள் உங்கள் குழந்தைகளிடம் உள்ளதா? எச்சரிக்கை
கனடாவில் சில வகை விளையாட்டுப் பொருட்களை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் கல்வி விளையாட்டு பொருட்கள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Placote My First Words மற்றும் பாக்கெட் ரூபிக்ஸ் கியூப் விளையாட்டுப் பொருட்களை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் இவ்வாறு சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.
ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கக் கூடிய விளையாட்டு பொருட்கள் கனடாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்யவோ, விளம்பரம் செய்து விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு உபகரணம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களில் ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கும் பொருட்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காடியம் என்னும் பொருள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதயத்தை பாதிக்கும் எனவும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த வகை விளையாட்டுப் பொருட்களில் கலந்துள்ள நச்சுப் பொருட்கள் உயிராபத்து ஏற்படுத்தக் கூடிய அளவில் ஆபத்தானது என தெரிவிக்கப்படுகின்றது.
. இந்த வகை விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்துவோர் அவற்றை மீள விற்பனை நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
என்ற நிறுவனத்தினால் Les Editons Passe-Temps Inc இந்த விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.