பிபிசிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்
பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
பனோரமா ஆவணப்படத்தில் தனது உரை திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பிபிசி மீது விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

இந்த விமர்சனத்தை எதிர்கொண்டு, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்ன்ஸ் ஆகியோர் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆவணப்படத்தை முழுமையாகவும் நியாயமாகவும் திரும்பப் பெற, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சட்டக் குழு பிபிசிக்கு இந்த மாதம் 14 ஆம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளது.
1 பில்லியன் டொலருக்கு வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.